பிபோர்ஜோய் புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை- ஆய்வுக்கு பிறகு அமித்ஷா பேட்டி
1 min readNo one lost their life due to Biborjoi storm- Amit Shah interviewed after inspection
17.6.2023
பிபோர்ஜோய் புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று ஆய்வுக்கு பிறகு அமித்ஷா கூறினார்.
புயல்
அரபிக்கடலில் கடந்த 5-ந் தேதி உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. இது நேற்று மாலை குஜராத் மாநிலம் ஜாகவ் துறைமுகம் அருகே கரையை கடந்தது. பிபோர்ஜோய் புயலின் கோர தாண்டவத்தில் ஜாகவ் துறைமுக பகுதி, பவ்நகர் மாவட்டங்களில் சுமார் 940 கிராமங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்டது. இங்குள்ள கட்டிடங்களின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. ராட்சத மரங்களும் வேரோடு சரிந்து விழுந்தது. சிறியதும், பெரியதுமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தது. மேலும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் இடிந்ததில் அப்பகுதியில் இருந்த வாகனங்களும் சேதமானது.
இதைதொடர்ந்து, புயலால் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குஜராத் முதலமைச்சருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். குஜராத்தில் புயலின் சேதம் குறித்து ஆய்வு செய்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி அளித்தார். அப்போது அவர், ” பிபர்ஜாய் புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
புயல் காரணமாக 47 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 234 விலங்குகள் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.