June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் காமராஜர் சிலை அமைக்க காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு

1 min read

The Congress meeting decided to erect a statue of Kamaraj in the shop

2.6.2023
தென்காசி மாவட்டம் கடையம் கே.எஸ். கோமதிநாயகம் வளாகத்தில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கடையத்தில் பெருந்தலைவர் காமராஜருக்கு முழு உருவச் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

இந்த கூட்டத்திற்கு சோனியாகாந்தி பேரவையின் மாநில தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் வட்டார தலைவர்கள் அழகுதுரை, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கலந்து கொண்டவர்கள்
ஐ.என்.டி .யு.சி மாநில செயலாளர் எஸ்.மாரி கணேசன் மற்றும் மும்பை
வி.பி. ராமையா, மகளிர் அணியினர் சீதாலட்சுமி, கே. டி .ஆர். சுகந்தா, வட்டாரத் துணைத் தலைவர் ராமச்சந்திர பாண்டியன், அந்தோணி, சாஸ்தா மாரிதுரை சிவா, பேச்சி அருண்குமார், மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். மாநில ஐ என் டி யு சி மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.மாரி கணேசனுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எஸ். ராமசுப்பு பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

காமராஜர் சிலை

  1. கடையம் மெயின் ரோட்டில் வாங்கப்பட்ட பட்டா இடத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது .

2 .ராமநதி, கடனாநதி பாசனத்திற்குட்பட்ட சுமார் 6000 ஏக்கருக்கு மேல் உள்ள நஞ்சை நிலத்திற்கு தேவையான தண்ணீர் செல்லும் மடைகளையும், கால்வாய்களையும் சீர் செய்ய தீர்மானம் நிறைவேற்றப் பட்டு மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களுக்கும் தீர்மானங்கள் அனுப்பப்பட்டுள்ளது .

  1. கடையத்தில் இருந்து ராமநதி அணை வரை உள்ள சாலையை உடனே சீரமைக்க வேண்டும் .

4 .பலமுறை வலியுறுத்தியது யாதெனில் கடையத்திற்கு புதிய தாலுகா அந்தஸ்து வழங்க வேண்டும்.
மேற்கண்ட உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் சோனியா காந்தி பேரவையின் மாநில செயலாளர் கோவிந்தப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே. பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.