தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவுக்கு மருத்துவ சிகிச்சை
1 min readMedical treatment for National Commission for Women member Khushbu
24.6.2023
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவுக்கு இடுப்பு எலும்பு பகுதியில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குஷ்பு
பாஜக நிர்வாகியான நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார். இவர் அண்மையில் காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிய நடிகை குஷ்பு, தற்போது இடுப்பு எலும்பு பகுதியில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், ”இடுப்பு எலும்பு பிரச்சினைக்காக மீண்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.