தமிழக கவர்னரை அகற்றக்கோரி சங்கரன் கோவிலில் மதிமுக கையெழுத்து இயக்கம்
1 min readMDMK signature drive at Sankaran Temple to remove Tamil Nadu Governor
25.6.2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு,
தமிழக கவர்னரை அகற்றக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் சிறப்பாக தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு மதிமுக துணைப் பொதுச் செயலாளர்வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி.சதன் திருமலைக்குமார், மதிமுக மருத்துவர் அணி செயலாளர்
டாக்டர் வி.எஸ். சுப்பாராஜ், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இல.சுதா பாலசுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்,
ஈ.ராஜா எம்எல்ஏ கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.
திமுக மாவட்டப் பொருளாளர் இல.சரவணன், திமுக.தலைமைச்செயற்குழு உறுப்பினர் பரமகுரு,
தி.மு.க. மேலநீலித நல்லூர் கிழக்கு ஒ.செ.வழக்கறிஞர் கே.வி.பெரியதுரை,
வி.சி.க. மாவட்டச் செயலாளர் குழந்தை வள்ளுவன், தொகுதி விசிக செயலாளர் பீர் முகம்மது, பார்வர்டு பிளாக் மாவட்டத் செயலாளர் தங்கபாண்டியன், நகர கழக நிர்வாகிகள்
பொதுக்குழு உறுப்பினர் குரு. வெங்கடாசலபதி
மாவட்ட மகளிர் அணி ஜெயலெட்சுமி சுப்பையா
டிரஸ்ஸரி மாடசாமி முருகேசன், நகர இளைஞர் அணிஆறுமுகம்,
பூக்கடை பொன்னுசாமி, ஹவுசிங் சொசைட்டி சண்முகம் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள்,
முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் செ.மோகன்தாஸ், சேர்மன் விஜயலட்சுமி கனகராஜ், இளைஞர் அணி
முகம்மது அக்கீம், தலைமைச்செயற்குழு ஆ.காளிராஜ், பொதுக்குழு உறுப்பினர் எம்.மணி, மண்டல இணைய தள பொறுப்பாளர் ஆர். சங்கரசுப்பு, தொகுதி இணைய தள நிர்வாகி ராகவன், மதிமுக ஒன்றிய செயலாளர்கள்
பெ.சசிமுருகன், ஏ.கே. ராஜகுரு, எஸ்.செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி ஜலாலுதீன், வழக்கறிஞர் அணி ராம்குமார், சம்சிகாபுரம் முத்துராஜ், குவளைக் கண்ணி ராஜன், எம்.எல்.எப். கி. நம்பிராஜன்,
ஒன்றிய இளைஞர் அணி குருக்கள் பட்டி காற்றாலை முருகன், திருமலாபுரம் செ.பிரபாகரன் உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
சங்கரன் கோவில் நகரக் கழகச் செயலாளர் எம்.ரத்னவேல்குமார் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள்
நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.