தென்காசி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் அமைச்சரிடம் வாழ்த்து
1 min readTenkasi District Planning Committee members congratulate the Minister
25.6.2023
தென்காசி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் 9 பேர்களும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு பேர்களும், வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது அதில் ஊரகப் பகுதியில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் இருந்து 7 உறுப்பினர்களும், நகர் பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து மொத்தம் 5 உறுப்பினர்களும் சேர்த்து மொத்தமாக 12 திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து ஏழு பேருக்கு 10 பேர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டதென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி
தி. உதயகிருஷ்ணன், திமுக சார்பில் போட்டியிட்ட, சி.சுதா பி. சுதா, இரா தேவி, மு.பூங்கொடி, மா.மாரிமுத்து, கே.மைதீன் பிவி, ஆகியோர் ஒவ்வொருவரும் பத்து வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
நகர் புற பகுதியில் இருந்து ஐந்து உறுப்பினர் பதவிக்கு 14 பேர் போட்டியிட்டனர் அதில் அதிமுகவை சேர்ந்த சுரண்டை சக்திவேல் 257 வாக்குகளும், திமுகவைச் சார்ந்த சங்கரன்கோவில் பா.சௌசல்யா 214 வாக்குகளும், கடையநல்லூர் ரா. முருகன் வாக்குகளும் வாசுதேவநல்லூர் சரவணன் 211 வாக்குகளும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த
சிவகிரி க. உலகேஸ்வரி 212 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து
தென்காசி மாவட்டத்தில் திட்டக்குழு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மா. செல்லத்துரை தலைமையில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தென்காசி மாவட்ட குழுத் தலைவி தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட மாவட்ட குழு துணை தலைவர் உதய கிருஷ்ணன், கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், கடையநல்லூர் ஒன்றிய குழு துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், திட்டக்குழு உறுப்பினர்கள் முருகன், பூங்கொடி, சுதா, தேவி, மைதீன் பீவி, பி.சுதா ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.