June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஈரோட்டில் டாஸ்மாக் கடையில் அமைச்சர் முத்துசாமி திடீர் ஆய்வு

1 min read

Minister Muthuswamy conducts surprise inspection at Tasmac shop in Erode

25.6.2026
ஈரோடு மேட்டுக்கடை அடுத்த கதிரம்பட்டியில் செயல்பட்டு வரும் 3826 எண் கொண்ட டாஸ்மாக் கடையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்

அமைச்சர் செந்தில் பாலாஜி

திமுக அரசு பொறுப்பேற்றாதில் இருந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை
அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் வருமானவரித்துறையினர் மற்றும் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டதை தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

முத்துசாமி

இதன் தொடர்ச்சியாக தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த சு முத்துசாமியிடம் கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வு துறை ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது

மேலும் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது தொடர்பாக தொடர்ச்சியாக புகார் எழுந்து வந்த நிலையில் இன்று ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் மேட்டுக்கடை பகுதியில் இயங்க வரும் அரசு மதுபான கடை மற்றும் மதுபான பார் உள்ள கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்திருவத்துறை அமைச்சர் சு முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகிறதா இந்த மதுபான கடையில் பார் வசதிக்கு உரிய அனுமதி பெற்றுள்ளனரா,
மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளதா என துறை சார்ந்த அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.செயல்பட்டு வரும் மதுபான கடைகள் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை அருகே கடைகள் உள்ளதா என ஆய்வு செய்தார்.மேலும் டாஸ்மாக் மதுபான கடையில் உள்ள ஊழியர்கள் இரவு நேரத்தில் பணத்தை எடுத்து செல்ல உள்ள சிரமங்கள் குறித்து ஊழியர்களிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.