எமர்ஜென்சி வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்- பிரதமர் மோடி டுவிட்
1 min readUnforgettable period in the history of Emergency – Prime Minister Modi David
25.6.2023
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. எமர்ஜென்சி வரலாற்றில் மறக்க முடியாத காலக்கட்டம்
பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எமர்ஜென்சி
1975-ம் ஆண்டு இந்தியா வில் எமர்ஜென்சி எனும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இருண்ட நாட்கள்
எமர்ஜென்சியை எதிர்த்து நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்த உழைத்த துணிச்சல் மிக்க அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.
எமர்ஜென்சியின் இருண்ட நாட்கள் நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. எமர்ஜென்சி நமது அரசியலமைப்பு சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளது.
இவ்வாறு மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
எமர்ஜென்சி அறிவித்த தினத்தை உத்தரபிரதேச மாநில பா.ஜனதா அரசு கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.