October 12, 2024

Seithi Saral

Tamil News Channel

24 மணி நேரமும் கனிமவளத்தை கொண்டு செல்லும் அனுமதியை ரத்து செய்ய ரவி அருணன் கோரிக்கை

1 min read

Ravi Arunan’s request to cancel the permit to transport minerals 24 hours a day

25.6.2023
தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் கனிமவளங்களை 24 மணி நேரமும் கொண்டு செல்ல அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் தென்காசி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன் கோரிக்கை எடுத்துள்ளார்.

முன்னாள் தென்காசி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே ரவி அருணன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கனிம வளம்

தமிழகத்திலிருந்து நாள்தோறும்
கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு 24 மணி நேரமும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு பகலாக தூங்காமல் கனரக வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி தென் மாவட்டங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது .

சமீபத்தில் களக்காட்டில் கூட ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.இதேபோன்று தென்காசி மாவட்டம் திரவிய நகர் அருகே வாகன ஓட்டுநர் வாகனம் ஓட்டும்போது அயர்ந்து தூங்கியதால் அங்கேயும் ஒரு விபத்து நடைபெற்றது.

இதுபோன்று குற்றாலத்தில் பள்ளி செல்லும் சிறுவர் மீது வாகனம் ஏற்றி விபத்துக்குள்ளானதால் அந்த சிறுவன் நடக்க முடியாத நிலையில் அவன் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.அதேபோன்று இலஞ்சியிலும் ஒரு வாகன விபத்தும் நடைபெற்றது.

இதுபோன்று தொழிலாளர் நல சட்டங்களுக்கு விரோதமாக இரவு பகல் கனிம வளங்களை கொண்டு செல்லலாம் என்று உத்தரவிட்டிருப்பது சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கும் வாகனத்தில் செல்பவர்களுக்கும் இந்த வாகனங்களால் விபத்து ஏற்படுகின்ற ஒரு சூழ்நிலை இருக்கின்றது.

இரவு பகலாக குவாரிகள் இயங்குவதால் அங்கே நிலச்சரிவு ஏற்படுகின்ற ஒரு வாய்ப்பு இருக்கிறது.ஆகவே தொழிலாளர் நல சட்டத்திற்கு விரோதமாக இரவு பகலாக குவாரிகள் இயங்குவதை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக அதை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.