தென்காசி மாவட்ட நூலகம் இடத்தை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்
1 min readTenkasi District Library location inspected by Associate Director
25.6.2023
தென்காசி மாவட்ட மைய நூலக கட்டிடம் தென்காசி ஐ சி ஐ அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 6 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது அந்த இடத்தை
பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்கக இணை இயக்குநர் அமுதவல்லி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மாவட்ட நூலகம்
தென்காசி மாவட்ட மைய நூலகம் ரூ 6 கோடி மதிப்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக மாதிரியில் அமைய உள்ளது. மாவட்ட மைய நூலகம் இ சி ஈ மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள இடத்தினை பள்ளிக்கல்வித்துறை பொது நூலக இயக்கக இணை இயக்குநர் த அமுதவல்லி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி.மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், கண்காணிப்பாளர் சங்கரன், வட்டார நூலகர் சூ.பிரமநாயகம், கிளைநூலகர் ஜெ.சுந்தர் நாகராஜ், பரமசிவன் பாலசுப்பிரமணியன், கல்வி துறை அலுவலர்கள் வாசகர் வட்ட நிர்வாகிகள் , உட்பட பலர் கலந்து கொண்டனர்.