சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min readStatue of VP Singh in Chennai State College Campus – Chief Minister M.K.Stal’s announcement
25.6.2023
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
வி.பி.சிங்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியியிருப்பதாவது:-
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களது பிறந்தநாளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்றுவதில் உறுதியான அர்ப்பணிப்புடன் இருந்த அப்புரட்சியாளருக்கு என் புகழஞ்சலியைச் செலுத்துகிறேன். சமூக நீதிக்கான பணியை அச்சமின்றி முன்னெடுத்து, அனைவரையும் “இடஒதுக்கீடு எங்கள் உரிமை” என ஓங்கி முழங்கச் செய்தவர் அவர். வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு அதிகாரமளிக்கும் இலக்கில் வி.பி.சிங்கும், தலைவர் கலைஞரும் ஒன்றிணைந்து செயல்பட்டவர்கள் ஆவர்.
வி.பி.சிங்கின் சிந்தனைகள் மேலும் ஒளிமயமான, சமத்துவமான எதிர்காலத்தை நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கிற்கு மாநில கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில கல்லுரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.