September 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் பவ்டா நிதி நிறுவனத்தின் 88 வதுகிளை திறப்பு விழா

1 min read

88th of Pavda Finance Company in Kadayam Branch Opening Ceremony

26/6/2023

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் பவ்டா நிதி நிறுவனத்தின் 88 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.

கடையம் கீழரத வீதியில் மதன்ஸ் காம்ப்ளக்ஸ் தரைத்தளத்தில் திறக்கப்பட்டுள்ள 88 வது பவ்டா நிதி நிறுவன அலுவலக திறப்பு விழாவிற்கு பவ்டா நிதி நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஆர். வெங்கடாசலபதி தலைமை தாங்கினார். பவ்டா நிதி நிறுவனத்தின் பொது மேலாளர் டாக்டர்.டி.எஸ்.அஜிதன், கட்டிட உரிமையாளர் செல்வி மதன் பரமசிவன், கடையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பூமிநாத், கடையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் அருண், பவ்டா நிதி நிறுவனத்தின் செங்கோட்டை மண்டல துணைப் பொது மேலாலர் ஆர்தர்சாம், வழக்கறிஞர் ராஜசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் பவ்டா நிதி நிறுவனத்தின் ஆலங்குளம் மண்டல பொது மேலாளர் வை.அழகுமுருகன் வரவேற்று பேசினார்

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பவ்டா நிதி நிறுவனத்தின் பணியாளர் கள் சுந்தர்ராஜ், ஹரிகரன், மாரியப்பன் சீதாராணி, சொர்ணமணி பத்மாவதி, ஏஞ்சல், விஜயலட்சுமி,
சுஷ்மிதா சென், பால் டேவிட் செல்வின், ஆனந்தஜோதி,
ரமேஷ், பாலகிருஷ்ணன், முருகன், முடிவில் பவ்டா நிதி நிறுவனம் கடையம் கிளையின் மேலாளர் என்.சக்திகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.