June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி திட்டக்குழு உறுப்பினர் அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் வாழ்த்து

1 min read

Tenkasi planning committee member congratulates AIADMK district secretaries

26.6.2023
தென்காசி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரண்டை சக்திவேல் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திட்டக்குழு உறுப்பினர்

தென்காசி மாவட்ட திட்டமிடுதல் குழு தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சுரண்டை நகர அதிமுக செயலாளரும் சுரண்டை நகர்மன்ற கவுன்சிலருமான சக்திவேல் தனது வெற்றி சான்றிதழுடன் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன்‌ மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் .

இந்நிகழ்வின் போது தென்காசி நகர அதிமுக செயலாளர் வே.சுடலை, செங்கோட்டை நகர செயலாளர் கணேசன், மேலகரம் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஞானராஜ், மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மபாண்டி, மாவட்ட பிரதிநிதி கருப்பசாமிராஜா, திப்பணம்பட்டி ராமசாமி, சுரண்டை அம்மா பேரவை செயலாளர் சங்கர், சுரண்டை நகர் மன்ற உறுப்பினர்கள் வசந்தன், பொன்ராணி ஜெபராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *