September 14, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே கந்து வட்டி பற்றி ஆட்சியரிடம் புகார்

1 min read

Complaint to collector about usury near store

27.6.2023
தென்காசி மாவட்டம், கடையம் அருகே கந்துவட்டி கும்பல் செய்து வரும் கொடுமையில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்

மனு

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அருணாசலம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ரவி என்பவரது மனைவி சங்கீதா என்பவர் செக்கடியூர் கிராமத்தை சேர்ந்த ரவி மற்றும் அவரது மனைவி மாலா என்ற கந்துவட்டி வசூலிப்பதாகவும் அவர்களிடம் இருந்து காப்பாற்ற கோரியும் மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனுவினை அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறேன். எனது கணவர் நெல்லையில் கல்லூரி மெஸ்ஸில் தங்கி இருந்து வேலை செய்கிறார். எனக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள்.

மாலா மற்றும் ரவியை கடந்த நான்கு வருடங்களாக தெரியும் .அவர்களிடம் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு ரூபாய் பத்தாயிரம் மருத்துவ செலவுக்காக கடனாக வாங்கினேன். மேற்படி கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து தினமும் ரூபாய் 300 இரண்டு வருடங்களாக கொடுத்து வந்தேன்.

இந்நிலையில் நான் கடன் தொல்லை தாங்காமல் ஒரு வருடம் திப்பணம்பட்டியில் இருந்து வந்தேன் பின்னர் எனது சொந்த ஊருக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது நான் எனது சொந்த ஊருக்கு வந்ததை தெரிந்து என்னிடம் வந்து தினமும் ரூபாய் 300 வாங்கினார். இந் நிலையில் எதிர் மனுதாரரிடம் வாங்கிய பணத்திற்கு மேலாக வட்டியுடன் பணத்தை கொடுத்து விட்டதால் நான் இனி பணம் தர முடியாது என கூறினேன்.

அதற்கு மாலா மற்றும் அவரது கணவர் ரவி இருவரும் சேர்ந்து என்னிடம் நீ வாங்கிய பணம் பத்தாயிரம் வட்டி கூடுதலாக வட்டி சேர்த்து மூன்று லட்சம் தர வேண்டியது உள்ளது பணத்தை தரவில்லை என்றால் வீட்டை எனது பெயருக்கு மாற்றித் தருமாறு என்னிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்த நிலையில் 22 6 2023 மதியம் பீடி கடைக்கு சென்ற நேரத்தில் எனது வீட்டை பூட்டி சாவியை எதிர்மனுதார் எடுத்து விட்டார். நான் வீட்டின் கதவு அடைத்து இருந்ததை பார்த்ததும் அக்கம் பக்கம் கேட்டேன் எதிர் மனுதார் அடைத்து விட்டதாக கூறினார்கள்.

உடனடியாக மாலா ரவியிடம் சென்று கேட்டதற்கு கண்டபடி என்னை திட்டி சாவியை தர முடியாது என கூறினார். அதனைத் தொடர்ந்து கடையம் காவல் நிலையத்தில் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் சாவியை வாங்கி திறந்து கொடுத்தார்கள்.

மேலும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எந்த நேரத்திலும் எதிர்மனுதாரர் மாலா மற்றும் அவரது கணவர் ரவியை கொண்டு அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது.மேலும் எனது குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும் அச்சப்படுகின்றனர். எனவே தாங்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு மாலா மற்றும் ரவி மீது நடவடிக்கை எடுத்து எங்கது குடும்பத்தை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.