புளியரை சோதனை சாவடி லாரி டிரைவரிடம் லஞ்சம்-சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு; 2 போலீசார் இடமாற்றம்
1 min readBribery to Puliyara checkpost lorry driver-sub-inspector suspended; Transfer of 2 policemen
28/6/2023
தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் கேரளாவுக்கு சென்ற வைக்கோல் லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்ட ஆய்க்குடி உதவி ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம் மற்றும் அங்கு பணியில் இருந்த இரண்டு போலீசார் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் சாம்சன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வழியான புளியரை பகுதியில் உள்ள சோதனை சாவடி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவுக்கு செல்கின்றன. இந்த வாகனங்களில் சட்ட விரோத கடத்தல்கள் மற்றும் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை வருவாய்த்துறை சுகாதாரத்துறை வணிகவரித்துறை அழியின் சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 26 ம் தேதி இரவு 10 மணி அளவில் செங்கோட்டையில் இருந்து கேரளாவிற்கு வைக்கோல் லோடு ஏற்றி சென்ற லாரி ஒன்று புலியரை சோதனை சாவடியை கடக்க முற்பட்டது. அப்போது அந்த லாரியை சோதனையிட்ட ஆய்க்குடி உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் அளவுக்கு அதிகமாக பாரம் இருப்பதாக கூறி லாரி டிரைவரிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த லாரி டிரைவர் தன்னிடம் 100 ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார்.
அப்போது அங்கு மகாராஜன் காளி ராஜன் ஆகிய இரண்டு காவலர்களும் பணியில் இருந்து உள்ளனர். இந்த வாக்குவாதத்தை போலீசாருக்கு தெரியாமல் லாரி டிரைவர் செல்போனில் படம் எடுத்து தென்காசி எஸ் பி யின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ளார்.
இது பற்றி விசாரணை நடத்திய தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சாம்சனா லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்ட ஆய்க்குடி உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் ஐ உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த காவலர்கள் மகாராஜன், காளிராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அதிரடி நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் லாரி டிரைவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.