தென்காசி மாவட்ட திட்டக்குழு முதல் கூட்டம்
1 min readFirst meeting of Tenkasi District Planning Committee
29.6.2023
தென்காசி மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டம் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
திட்டக்குழு
தென்காசி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் கடந்த 23-ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த குழுவின் முதல் கூட்டம் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். திட்டக்குழு துணைத் தலைவரும் மாவட்ட கலெக்டருமான துரை. இரவிச்சந்திரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவரும் திட்ட குழு உறுப்பினருமான ஆயிரப்பேரி தி. உதயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் திட்டக் குழு உறுப்பினர்கள் பி.சுதா, சி.சுதா, தேவி, பூங்கொடி, மாரிமுத்து, மைதீன் பீவி, சக்திவேல், கவுசல்யா, உலகேஸ்வரி, முருகன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் பேசும்போது இந்த திட்டக் குழு தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.