தமிழக மீனவர் 9 பேர், 2 படகுடன் சிறைபிடிப்பு
1 min read9 Tamilnadu fishermen, 2 boats captured
25.7.2023
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மீனவர் 9 பேரை, 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
மண்டபம் மீனவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட கடல் மீன்பிடி தளத்தில் இருந்து 267 விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றன. இப்படகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து விட்டு நேற்று அதிகாலை கரை திரும்பின. அப்போது, கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகள், அதிலிருந்த 9 மீனவர்களை சிறைபிடித்தனர். விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சுந்தரமுடையான் தில்லை நாச்சியம்மன் குடியிருப்பு
வேல்முருகன் என்பவரது படகில் சென்ற படகோட்டி சுரேஷ் (36),
ஆறுமுகம் (44), மணிகண்டன் (35),
முத்துக்குமார் (36), உச்சிப்புளி அருகே வட்டான்வலசை
தட்சிணாமூர்த்தி என்பவரது படகில் சென்ற படகோட்டி ஜெயசீலன் (53),
வேலு (53), முத்திருளாண்டி (58), முஹமது பஹ்ருதீன் (63), ரங்கசாமி (63) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள் 9 பேரையும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் கடந்த 2 நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் 15 பேர் இன்னும் சொந்த ஊர் திரும்ப நிலையில், மற்றொரு சிறைபிடிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது.