May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் 1 லட்சம் மரக்கன்றுகள்இலவசமாக வழங்கல்

1 min read

1 lakh saplings in Tenkasi Free delivery

27.7.2023
தென்காசி மாவட்டத்தில் திருநெல்வேலி வனக்கோட்டத்தின் சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு 1 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர்.இரா.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரித்து, புவி வெப்பமய மாதலை தடுக்க அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அந்த வகையில் பசுமை தமிழக இயக்க திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, விவசாயிகள், பொதுமக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் துறை நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசின் வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்திலும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பசுமை தமிழக இயக்க திட்டத்தின் கீழ் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர் இரா.முருகன் உத்தரவின்படி தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மாறாந்தை நாற்றங்காலில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தற்போது தேக்கு, செம்மரம், வேங்கை, மகாகனி, வேம்பு, புங்கன், நீர்மருது, பலா, நெல்லி, குமிழ், இலுப்பை, நாவல், வாகை ஆகிய மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து தயார் நிலையில் உள்ளது.

எனவே மரக்கன்றுகளை இலவசமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள நான்கு வனச்சரக அலுவலர்கள் மூலம் பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. குற்றாலம் வனச்சரக அலுவலர் சீதாராமன் 98420 85519, கடையநல்லூர் வனச்சரக அலுவலர், சுரேஷ், 89404 47337, புளியங்குடி வனச்சரக அலுவலர் ச.சிக்கந்தர் பாட்ஷா, 99524 53375, சிவகிரி வனச்சரக அலுவலர் இரா.மௌனிகா 83442 96336, ஆலங்குளம் பிரிவு வனவர் சங்கர்ராஜா 86104 75154, மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை எண். 0462 2553005, 0462 2903605 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் GTM Online Website (www.greentnmission.com) ல் தங்கள் கோரிக்கையை பதிவு செய்து பொதுமக்கள் பயன்பெறுமாறு மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் டாக்டர் இரா.முருகன்; தெரிவித்துள்ளார்.
வலர்கள் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.