புளியரை அருகே மகாத்மா காந்தி பொது நூலகம் -கலெக்டர் திறந்து வைத்தார்.
1 min readCollector inaugurated Mahatma Gandhi Public Library near Puliarai.
28.7.2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புளியரை ஊராட்சி பகுதியில் அகில இந்திய காந்தியை இயக்கம் சார்பில் கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி பொது நூலகத்தை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.
அண்ணல் காந்தியடிகளின் கனவின்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத குக் கிராமத்தை தத்தெடுத்து கிராமப் பணிகளை அகில இந்திய காந்திய இயக்கம் மேற்கொண்டு வருகிறது. அகில இந்திய காந்திய இயக்கத்தின் தலைவர் விவேகானந்தன் கூறும் பொழுது அடிப்படை வசதி இல்லாத குக்கிரமான புளியரை அடுத்த மடத்தரை பாறையில் கிராம மக்கள் வேண்டுகோள் படி பொது நூலகம் ஒன்று அகில இந்திய காந்திய இயக்கம் கட்டிக் கொடுத்துள்ளது. 27/07/23 அன்று அதன் திறப்பு விழா மிகவும் விமர்சையாக நடந்தது.
. மகாத்மா காந்தி பொது நூலக திறப்பு விழாவிற்கு அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் செங்கோட்டை விவேகானந்தன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் நூலகத்தைத் திறந்து வைத்து பேசினார்.
அப்போது மகாத்மாவின் கனவின்படி பொது நூலகம் சிறப்பாக அமைந்துள்ளது என்று பாராட்டி பேசினார்கள். தலைமையேற்ற அகில இந்திய காந்திய இயக்கத்தலைவர் பேசும்போது எதிர்காலத்தில் இது போன்ற அடிப்படை வசதி இல்லாத கிராமத்தை தத்தெடுத்து அரசு உதவியுடனும், காந்தி அன்பர்கள் உதவியுடனும், மக்கள் உதவியுடனும், சிறப்பான காந்திய பணிகளை மேற்கொள்ளப் போவதாக கூறினார்.
இந்த விழாவில் புளியரை ஊராட்சி மன்ற தலைவர் அழகிய சிற்றம்பலம் காந்தியவாதி செ.ராம் மோகன், எஸ்.முத்துசாமி, எக்ஸ்னோரா மாவட்ட தலைவர் டாக்டர் விஜயலட்சுமி, சமூக ஆர்வலர் வெங்காடம் பட்டி பூ..திருமாறன்,எம்.பிஅன்பு சிவன், நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
முடிவில் அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் செங்கோட்டை விவேகானந்தன் அனைவருக்கும் நன்றி கூறினார்.