June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

1 min read

Tourists bathe enthusiastically in Kurdalam waterfalls

28.7.2023
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது. அவ்வப்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்வதுடன், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த இதமான சீசனை அனுபவிப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். வார விடுமுறை நாட்களில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்தின ருடன் அருவிக்கரைகளில் குவிகின்றனர்.

விடுமுறை நாள் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. குற்றாலம் அருவிக் கரைகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக குளிக்கும் நிலை உள்ளது .

குற்றாலத்தில் இன்று குளிர்ந்த காற்று வீசுகிறது.சாரல் மழை பொழியாவிட்டாலும் இதமான சூழ்நிலை நிலவுகிறது . இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *