தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் குடும்ப நல சிகிச்சை முகாம்
1 min readFamily Welfare Treatment Camp at Tenkasi Government Head Hospital
29.7.2023
மாவட்ட குடும்ப நலச் செயலகம் மற்றும் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய குடும்ப நல சிகிச்சை முகாமில் 19 தாய்மார்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டது..
மருத்துவ முகாம்
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் அறிவுரையின்படி, இணை இயக்குனர் நல பணிகள் பிரேமலதா, துணை இயக்குனர் குடும்ப நலம் ராமநாதன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யில் குடும்ப நல சிறப்பு மருத்துவ முகாம் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த முகாமிற்காக தென்காசி. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்தும் தாய்மார்களை, கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் வட்டார சுகாதார புள்ளியலாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.
அதில் 19 பயனாளிகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் அனிதா பாலின் , புனிதவதி, செல்வ பாலா ,சாரதா தேவி, தமிழருவி,, சைனி கிருத்திகா மற்றும் மயக்க மருத்துவர்கள் மில்லர், ராஜேஸ்வரி, ஆகியோர் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்தனர்.
குடும்ப நலம் ஏற்ற தாய்மார்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை யாக ரூபாய் 600/- வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
மேலும் கூடுதலாக தாய்மார்களிடம் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இணை இயக்குனர் நலப்பணிகள் மற்றும் துணை இயக்குனர் குடும்ப நலம் இருவரின் ஏற்பாட்டில்,
சிறப்பு முகாமில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பயனாளிகளுக்கு முதல் பரிசு 10 கிராம் வெள்ளி நாணயம், இரண்டாம் பரிசு எவர்சில்வர் குத்துப்போணி மற்றும் மூன்றாம் பரிசாக எவர்சில்வர் குடமும் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா அவர்கள் தலைமையேற்று பரிசுகளை வழங்கினார்கள்.
குடும்பக் கட்டுப்பாட்டினை ஊக்குவிக்கும் இச்சிறப்பு முகாமிற்கு,அதிக தாய்மார்களை அழைத்து வந்த கிராம சுகாதார செவிலியர் மகரஜோதி என்பவருக்கு சிறப்பு பரிசாக 5 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது.
மேலும் இம் முகாமில் கலந்து கொண்ட பயன் பெற்ற அனைத்து தாய்மார்களுக்கும் மஞ்சப்பை, எவர்சில்வர் தட்டு, எவர்சில்வர் டிபன் பாக்ஸ் மற்றும் பேரிச்சம்பழம் பாக்கெட் வழங்கப்பட்டது.
இம்மு முகாமில் இணை இயக்குனர் நலப்பணிகள் மற்றும் துணை இயக்குனர் குடும்ப நலம் மருத்துவர்
.மு. ராமநாதன், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஜெஸ்லின், உறைவிட மருத்துவ அலுவலர் மரு. செல்வ பாலா,மகப்பேறு துறைத்தலைவர் மருத்துவர் . புனிதவதி, மற்றும் கடையநல்லூர் தலைமை மருத்துவர் மருத்துவர். அனிதா பாலின்,, மயக்க மருத்துவர் ராஜேஸ்வரி, சாரதா தேவி, மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினர்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சோ. ஜெயசித்ரா, வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர்கள், மருத்துவமனை செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், குடும்ப நலவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
முகாமில் கலந்து கொண்ட பயனாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மகப்பேறு துறை தலைவர் புனிதவதி மதிய உணவு வழங்கினார்.
முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின், மகப்பேறு மருத்துவர்கள், மயக்க மருத்துவர்கள்,, மருத்துவமனை செவிலியர்கள்,, அறுவை அரங்கு உதவியாளர்கள், மாவட்ட விரிவாக்க கல்வியாளர், வட்டார சுகாதார புல்லியலாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் அனைவரையும் துணை இயக்குனர் குடும்ப நலம் மருத்துவர் ராமநாதன் பாராட்டி நன்றி கூறினார்.