இரண்டு கொலை முயற்சி வழக்குகளில் வி.கே.புதூரைச் சேர்ந்தவருக்கு தலா 7 ஆண்டுகள் தண்டனை
1 min readVK Putur resident sentenced to 7 years each in two attempted murder cases
29.7.2023
தென்காசி மாவட்டம் வி.கே புதூர் பகுதியில் இரண்டு கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொலை முயற்சி
தென்காசி மாவட்டம், வி.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜபாண்டியை சேர்ந்தவர் சண்முக பாண்டி(வயது 62) என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சண்முக பாண்டியை சுரண்டை காவல் ஆய்வாளர் பெருமாள் கைது செய்து சிறையில் அடைத்தார்.
பின்னர் ஜாமினில் வெளியே வந்த சண்முகபாண்டி கடந்த 2021 ஆம் ஆண்டு தனது மனைவியின் தவறான நடத்தைக்கு மாமியார் உடந்தை என்று நினைத்து தனது மனைவியின் சகோதரர், மனைவியின் தாய் மற்றும் மனைவியுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகப்படும் நபர் ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சண்முக பாண்டியை சுரண்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த 2 வழக்குகளின் விசாரணை தென்காசி உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிக்கு சண்முக பாண்டி மீது உள்ள இரண்டு கொலை முயற்சி வழக்குகளுக்கும் தலா 7 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குற்றவாளி சண்முக பாண்டி கடந்த 2021 ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் இன்று வரை சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் மாரிக்குட்டி ஆஜரானர்.மேலும் இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த வி.கே. புதூர் காவல்துறையினருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.