இலங்கை தமிழர் 4 பேர் தனுஷ்கோடி வருகை
1 min read4 Sri Lankan Tamils visit Dhanushkodi
31.7.2023
தனுஷ்கோடி அருகே கடற்கரையில் இன்று அதிகாலை வந்திறங்கிய இலங்கை தமிழர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அகதிகள்
இலங்கை வவுனியா தவசிகுளத்தைச் சேர்ந்த மோகன் மகன் பிரதீப் குமார் (வயது 36). இவரது மனைவி மேரி (36), இவர்களது மகள்கள் கிருத்திகா (7), கிருஸ்மிதா (4). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நேற்று இரவு 10:30 மணியளவில் மர்மப்படகு மூலம் இலங்கை மன்னாரில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 1 மணியளவில் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் கடற்கரை வந்திறங்கினர்.
இவர்கள் 4 பேரையும் ராமேஸ்வரம் மெரைன் போலீசார் மீட்டு ராமேஸ்வரம் கடற்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், கடந்த 2022 மார்ச் 22 ஆம் தேதி முதல் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளது. தற்போது வரை தமிழகம் வந்த 269 பேர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.