மதுரை மாநாடு தொடர்பாக தென்காசியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்.
1 min readAIADMK consultative meeting in Tenkasi regarding AIADMK conference in Madurai.
31.7.2023
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாடு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர்கள் 10 பேர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தென்காசி இசக்கி மஹால் மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ண முரளி (எ ) குட்டியப்பா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஆலங்குளம் பி ஜி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, மாநில விவசாய பிரிவு துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், முன்னாள் எம்பி கே.ஆர.பி.பிரபாகரன், மாவட்ட அவைத்தலைவர் இலஞ்சி எஸ்.கே. சண்முகசுந்தரம், சாம்பவர் வடகரை வீ.பி.மூர்த்தி மாவட்ட துணைச் செயலாளர்கள் பொய்கை சோ.மாரியப்பன், வீரபாண்டியன், பசுபதி, மாவட்ட இணை செயலாளர்கள் முத்து லட்சுமி, சண்முகப்பிரியா, மாவட்ட பொருளாளர்கள் சாமிநாதன், சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக எழுச்சி மாநாட்டில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 50 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். மதுரை எழுச்சி மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மகத்தான வெற்றி பெற அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பேசினார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, வளர்மதி, செல்லூர் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா, அதிமுக அமைப்பு செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவன் ஆகியோர் பேசினார்கள்.
இந்தக் கூட்டத்தில் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிவஆனந்த், ராமையா, கந்தசாமி பாண்டியன், இலஞ்சி மு. காத்தவராயன், கண்ணன், சந்திரகலா, பிரேம்குமார், குத்தாலிங்கம், ஆலங்குளம் கிருஷ்ணசாமி, பரமகுருநாதன், நெல்லை முகிலன், சுப்பையா, சிவ சீத்தாராம், சேகர், மகபூப் மசூது, ஆறுமுகச்சாமி,
அதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தென்காசி கசமுத்து, பாண்டியராஜன், முருகையா, காளிராஜ், தங்கம், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் தென்காசி சங்கர பாண்டியன், வல்லம் ராமச்சந்திரன், கீழப்பாவூர் இருளப்பன், அமல்ராஜ், ஆலங்குளம் என்.எச்.எம். பாண்டியன், பாலகிருஷ்ணன், கடையம் அருவேல்ராஜ், முருகேசன், சுப்பிரமணியன், சுப்பையா பாண்டியன், ஆய்க்குடி கே.செல்லப்பன், கடையநல்லூர் வசந்தம் முத்துப்பாண்டியன், ஜெயக்குமார், வாசுதேவன், வேல்முருகன், செல்வராஜ், ரமேஷ், மகாராஜன், துரைப்பாண்டி,
அதிமுக நகர செயலாளர்கள் தென்காசி வே.சுடலை, சுரண்டை சக்திவேல், செங்கோட்டை கணேசன், கடையநல்லூர் எம்.கே.முருகன், பரமேஸ்வர பாண்டியன், ஆறுமுகம், பேரூர் செயலாளர்கள் மேலகரம் வழக்கறிஞர் கார்த்திக் குமார், குற்றாலம் கணேஷ் தாமோதரன், சுந்தரபாண்டியபுரம் முத்துராஜ், அச்சன்புதூர் டாக்டர் சுசீகரன், ஆய்க்குடி முத்துக்குட்டி, சங்கர், சகாய அருள் வில்சன், சுப்பிரமணியன்,ஜெயராமன் வடகரை அலியார் பாலசுப்பிரமணியன் நல்லமுத்து, கார்த்திக் ரவி, சேவகப் பாண்டியன், கடையநல்லூர் ஒன்றிய திமுக கவுன்சிலர் சத்திய கலா தீபக், மாவட்ட மாணவர் அணி கருப்பையாதாஸ், செங்கோட்டை ஞானராஜ், கீழப்பாவூர் சேர்மப்பாண்டி, அதிமுக வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், சிவக்குமார்,அருண், ரெங்கராஜ், ராமச்சந்திரன், பாலமுருகன், தென்காசி நகர திமுக நிர்வாகிகள் வெள்ளப் பாண்டி, சாமி ஆசாரி,
கௌரி முருகன் ராஜ், காதர், முத்துக்குமாரசாமி, மைமூன் பீவி, சிந்தாமணி காமராஜ், கருப்பசாமி ராஜா, சுப்பிரமணியன், அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உமா மகேஸ்வரன், ராமசுமதி, மாரியப்பன், குருசாமி, சந்துரு, கோபால், செந்தில், அகமதுஷா, பங்காரு, பட்டுப்பூச்சி பூர் முகம்மது, கனகசபாபதி, ராமகிருஷ்ணன், செல்லப்பா, கருப்பையா தாஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் தென்காசி நகர அதிமுக செயலாளர் வே.சுடலை அனைவருக்கும் நன்றி கூறினார்.