சிவகிரி அருகே டீ கப்பை கீழே போட்ட மனைவிஅடித்து கொலை- கணவர் கைது
1 min readWife beaten to death for dropping tea cup near Sivagiri- Husband arrested
31.7.2023
சிவகிரி அருகே டீ கப்பை கீழே போட்ட மனைவியை அடித்து கொலை செய்த மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
வாக்குவாதம்
மேற்கு வங்க மாநிலம் நொய்டா மாவட்டம் சுந்தலப்பூரைச் சேர்ந்தவர் புது மான் என்பவரது மகன் அர்ஜுன் மால் (வயது 35). இவரது மனைவி சபி மால் (வயது 30). இவ்விருவரும் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி கம்மாய் பகுதியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் தங்கி இருந்து வேலை பார்த்தனர்.
நேற்று அதிகாலை 2 மணி அளவில் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு செங்கல் அறுத்து கொண்டிருந்தனர். அப்போது சபிமால் டீ கொண்டுவந்த போது டீ கப் கீழே விழுந்து விட்டது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சாவு
வாக்குவாதம் முற்றவே கோபம் அடைந்த அர்ஜுன் மால் தனது மனைவியை பின் தலையில்
கம்பால் அடித்து தாங்கள் தங்கி இருக்கும் தகர ஷெட்டுக்குள் போட்டுள்ளார்.
காலை வெகு நேரம் ஆகியும் சபிமால்
எழுந்திருக்கவில்லை. அர்ஜுன் மால் ஷெட்டுக்குள் சென்று பார்க்கும் பொழுது சபிமால் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து சிவகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு புளியங்குடி டிஎஸ்பி அசோக்குமார்,காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி விரைந்து சென்று சபிமால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை அடித்து கொலை செய்த அர்ஜுன் மாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.