June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ. 2 கோடி செலவில் பேவர் பிளாக் சாலைப் பணிகள்

1 min read

n Geezapavur Municipality Rs. Paver block road works at a cost of 2 crores

1.8.2023
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் பேவர் சாலைகள் அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது

பேவர் பிளாக்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூபாய் 2.00 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சிக்கு உட்பட்ட 27 தெருக்களில் மண் சாலையினை பேவர் பிளாக் சாலையாக அமைத்தல் பணியின்
ஆரம்பகட்ட பணிகளை கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் சு.ராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த விழாவிற்கு கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் ஜா.மாணிக்கராஜ், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் கி.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர்
பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கு.ஜெய சித்ராகுத்தாலிங்கம், க.இசக்கிராஜ்,ரா.விஜி
ராஜன், மா.இசக்கிமுத்து, ஜெ.முத்துசெல்விஜெகதீசன், மற்றும் பொன்.அறிவழகன், ச.செல்வன், நாராயண சிங்கம், சுடர்ராஜன், வேலாயுதம், பொன் டயட்கணேசன், சண்முக வேல், சுடலையாண்டி, சா.தெய்வேந்திரன், அன்பரசு, ஆ.தங்கச்சாமி, சுப்பிரமணியன், ரா.ராமகிருஷ்ணன், யோவான், சின்னராஜா, விநாயகபெருமாள், ஜெயடினா முருகன், தாமோதரன், ச.பாண்டி, பாரதிராஜா, சாமிராஜ், குத்தாலிங்கம், கந்தசாமி, பெரியசாமி, பாலமுருகன், ராஜதுரை, பாலமுருகன், மாடசாமி, மாரியப்பன், சரவணன், சுடலை. முப்புடாதி, ராமையா, எழில்துரை, மாரிகண்ணன், திருவம்பலம் சிவராம நாடார் தமிழ்ச்செல்வன் சுடர் ஒளிவு வைரவன் ராஜேந்திரன் சீனிப்பாண்டி ராம்குமார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *