திருப்பதி அருகே செம்மரம் கடத்தல்- தமிழர்கள் 47 பேர் கைது
1 min read
Sheep smuggling near Tirupati- 47 Tamils arrested
14.8.2023
திருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழர்கள் 47 பேர் கைது செய்யப்ப்டனர்.
செம்மரக்கடத்தல்
திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கட்டைகள் மட்டுமே விளைகின்றன. செம்மரங்களை வெட்டி கடத்துவது கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக விலை காரணமாக இந்த கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
ஆனால் சேஷாசலம் வனப்பகுதியின் பல இடங்களில் செம்மரங்களை வெட்டி கடத்தும் பணியில் ஏராளமான கடத்தல்காரர்கள் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 கூலித்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஆந்திராவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரையும் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.