June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆடி அமாவாசை- சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அரசு பஸ்கள் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

1 min read

Sorimuthu Ayyanar Temple Aadi Amavasai Festival: Public will be allowed only through government buses

13.8.2023
சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு பொதுமக்கள் அரசு பஸ்கள் மூலமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று மாலை வரை மட்டும் தனியார் வாகனங்களில் பொது மக்கள் குடில் அமைக்கும் பொருட்கள் எடுத்து செல்வதற்கு அனுமதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.

எக்காரணம் கொண்டும் இன்று மாலைக்கு பிறகும், நாளை (திங்கட்கிழமை) முதல் தனியார் வாகனங்கள் கட்டாயம் அனுமதிக்கப் படாது. பொதுமக்கள் அனைவரும் அகஸ்தியர் பட்டி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் மூலமாக மட்டுமே செல்ல அனுமதிக்கப் படுவார்கள். பொதுமக்கள் அனைவரும் அரசு துறை களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *