June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

1 min read

144 Prohibitory Order in Tenkasi District

19.8.2023
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஒண்டிவீரன் நினைவு தினம் மற்றும் பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம்,சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒண்டிவீரன் 252-வது நினைவு தினத்தையொட்டி நடைபெறும் வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1-ந்தேதி நெல்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் 138-வது பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு பொதுமக்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில்
உள்ளூர் மற்றும் தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருகிறார்கள்.

இதனை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் (தி்ங்கட்கிழமை) காலை 10 மணி வரை மற்றும் வருகிற 30-ந்தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ந்தேதி காலை 10 மணி வரை குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144 (1) மற்றும் (2) தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கூட்டமாக செல்லாமல் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்தி முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *