தென்காசி மாவட்டத்தில் நூலகக் குழு ஆய்வு கூட்டம்
1 min read
Library Committee Review Meeting in Tenkasi District
20.8.2023
தென்காசி மாவட்டத்தில் நூலகக் குழு ஆய்வு கூட்டம் நடந்தது.
ஆய்வு கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் தலைமையில் ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் சட்டசபை செயலாளர் சீனிவாசன் நூலகக்குழு உறுப்பினர்கள் மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் கணபதி முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது
இக்கூட்டத்தில் நூலக வரி நிலுவைத் தொகையினை தென்காசி நகராட்சி 15,35,668 சுரண்டை நகராட்சி 10,81,078 புளியங்குடி நகராட்சி 18,54,107 சங்கரன்கோவில் நகராட்சி 23,20,316 மற்றும் அச்சன் புதூர் பேரூராட்சி 20,4,922 என மொத்தம் 69 லட்சத்து 96 ஆயிரத்து, 091 ரூபாயை நூலகக்குழுத் தலைவர் பொது நூலாக இணை இயக்குனர் அமுதவல்லியிடம் வழங்கினார்கள்.
முன்னதாக தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவுசார் மையம் தென்காசி மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள வ உ சி வட்டார நூலகம் திப்பணம்பட்டி கிளை நூலகம் செங்கோட்டை முழு நேர கிளை நூலகம் ஆகிய நூலகங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் உரையாடினார்கள்.
போட்டித் தேர்வு
மாணவர்கள் போட்டித் தேர்வு பயில்வதற்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவன நூல்கள் மற்றும் என்சிஆர்டி நூல்கள் தேவை என தெரிவித்தார்கள் அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தென்காசி செங்கோட்டை சங்கரன்கோவில் நூலகங்களுக்கு 12 செட் நூல்கள் இக்கூட்டத்தில் வழங்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பொது நூலக இணை இயக்குனர் அமுதவல்லி மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, திட்ட இயக்குனர் மைக்கேல் ஆண்டனி பெர்னான்டோ, முதன்மை கல்வி அலுவலர் முத்தையா
மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் செல்வி, உதயகுமார் நூலகர் சூ.பிரமநாயகம், ஜெ.சுந்தர் கோ.இராமசாமி முருகன் உள்ளாட்சி நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நூலகக்குழு தலைவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது .