June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருகே திமுக மருத்துவர் அணி சார்பில் இலவச மருத்துவ முகாம்

1 min read

Free medical camp organized by DMK doctor team near Courtalam

20.8.2023
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, தென்காசி தெற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை
வே.ஜெயபாலன் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி ஒன்றிய திமுக செயலாளர்கள் வல்லம் எம்.திவான்ஒலி, ஆர்.எம்.அழகு சுந்தரம், தென்காசி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வல்லம் மு.ஷேக்அப்துல்லா, செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன், தென்காசி நகர செயலாளரும், நகர் மன்ற தலைவருமான ஆர்.சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, காசிமேஜர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலம் இசக்கி பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா சரவணன், கொட்டாகுளம் இ.இசக்கிப் பாண்டியன், கீழப்புலியூர் சே. தங்கபாண்டியன் சாம்பவர் வடகரை மாறன், காசிமேஜர் புரம் திமுக கிளை கழக செயலாளர்கள் நீலகண்டன், ஆறுமுகம், தென்காசி தெற்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் மருத்துவர் மாரிமுத்து, தென்காசி தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் அன்பரசன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் சர்க்கரை நோய், குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, மற்றும் பொது மருத்துவம், மூட்டு வலி, முதுகு வலி, கழுத்து வலி, சம்பந்தமான பிரச்சனைகள் தோல் நோய்கள், உள்ளிட்ட அனைத்து நோய்களுக்குரிய சிறப்பு மருத்துவர்கள் தமிழரசன், செல்வ ரங்கராஜ், கௌதமி தமிழரசன், சிவச்சந்திரன், தமிழருவி, முத்துக்குமாரசாமி, உள்ளிட்ட மருத்துவர்கள் இதில் கலந்துகொண்டு பொது மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையினை அளித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *