தென்காசி அருகே நடந்த பெண் அடித்து கொலையில் கள்ளக்காதலன் உட்பட 5 பேர் கைது
1 min read
5 people, including a counterfeiter, were arrested in the beating of a woman near Tenkasi
20.8.2023
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கிணற்றில் சாக்கு மூட்டையில் பிணமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணை அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலன் உட்பட ஐந்து பேர்களை போலீசார் கைது செய்தனர்.
கிணற்றில் பிணம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தில் ஒரு கிணற்றில் கடந்த 10 ம் தேதி சாக்கு முட்டையில் அழுகிய நிலையில் ஒரு இளம் பெண் உடல் மிதந்தது இது பற்றி கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருவாணிவயல் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகள் வினோதினி !வயது 19) என்பது தெரிய வந்தது. திருமணமாகி நான்கு மாதங்களே ஆன புது பெண்ணை அவரது கள்ளக்காதலன் கடையநல்லூர் அருகே உள்ள வலசை வடக்கு காலனி பகுதியைச் சார்ந்த பொக்லைன் ஆபரேட்டர் மனோரஞ்சித் (வயது 22) அடித்து கொலை செய்து அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி சென்றது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதே ஊரைச் சேர்ந்த மகாபிரபு (வயது 27) பரத் (வயது 21) கடையநல் லூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மணிகண்டன்
(வயது 21) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேர்களை போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். நீதிபதி கைது செய்யப்பட்ட மனோ ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர்களையும் பாளையங் கோட்டை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார் 17 வயது சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க உத்தரவிட்டார்.