June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் ஆட்டோ  டிரைவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தல்

1 min read

Officials advise auto drivers in Tenkasi

20.8.2023

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்  போக்குவரத்து அதிகாரிகள் ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கனகவல்லி மணி பாரதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர்  கண்ணன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்டோக்களில் பள்ளிக் குழந்தைகளை அதிகமாக ஏற்றி செல்லக்கூடாது. 

புத்தகப் பைகளை ஆட்டோக்களின் ஓரங்களில் தொங்கவிடக் கூடாது. டிரைவரின் இருக்கையில் குழந்தைகளை அமர வைக்க கூடாது. ஒரு ஆட்டோவில் 6 குழந்தை களை மட்டுமே ஏற்ற வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மற்றும் டிரைவர்கன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆட் டோவின் தகுதிச்சான்று இன் குரன்ஸ், டிரைவர் உரிமம் போன்றவை உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டு வைத்திருக்க வேண்டும். ஆட்டோ டிரைவர்கள் சீருடையில் தான் ஆட்டோக்களை ஓட்ட வேண்டும். தகுதிச்சான்று இன் குரன்ஸ், டிரைவர் உரிமம் போன்ற  சான்றுகள் இல்லாமல் இருந்தால் விபத்து நிகழும்போது பாதிக்கப் கப்பட்டவர்களுக்கு காப்பீட் டுத்தொகை கிடைக்காது. எனவே உரிய சான்றுகள் இல்லாமல் ஆட்டோக்களை இயக்கினால் ஆட்டோ பறிமுதல் செய்யப்படும்.பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி ஆட்டோ டிரைவர்கள் இதனை பின்பற்றி ஒத்து ழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கனகவல்லி, மணிபாரதி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணி, தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், பாவூர் சத்திரம் மற்றும் சுற்று வட் டார பகுதிகளை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

One attachment • Scanned by Gmail

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *