கடையத்தில் சாலைபோட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
1 min readDemonstration demanding road construction at the shop
31.8.2023
கடையத்தில் 15 ஆண்டுகளாக போடப்படாத சாலையை போட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிதிலமடைந்த சாலை
கடையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற 18 பட்டி மக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் கடையம் ராமநதி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலை மிகவும் சிதலமடைந்து பயணம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. ஒவ்வொரு வருடமும் கொடை விழாவின் போது எட்டாம் திருவிழாவின் போது அம்மனை பெரிய தேர் சப்பத்தில் பக்தர்கள் தோளில் சுமந்து செல்வார்கள். சப்பரம் அதிக எடையுடன் இருப்பதால் 4 தண்டயம் கட்டி சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுமந்து செல் கொண்டு. அந்த சாலை பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கரடுமுடராக உள்ளது. திருவிழாவின் போது பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவர்கள். இதுபற்றி ஊர் மக்கள் பல கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் பயன் இல்லை. இந்த சாலை தென்பத்து, வடபத்து, மேலப்பத்து, கோணம், பட்ரோட்டி ஆகிய வயல்வெளிக்கு விவசாயிகள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் நித்திய கல்யாணி அம்மான் உடனுறை வில்வவனநாதர் கோவில், ராமநதி அணை, சூட்சமுடையார் கோவில் மலையடிவாரத்தில் உள்ள தலைமலை அய்யன் கோவிலுக்குச் செலும் பக்தர்களும் இந்த வழியாகத்தான் செல்லவார்கள். தோரணமலைக்கு செல்லும் பக்தர்கள் இந்த வழியை தவிர்த்து மாதாபுரம் வழியாக செல்கிறார்கள்.
இவ்வளவு பயன்பாட்டில் உள்ள சாலையை கடந்த 15 ஆண்டுகளாக ஏன் சீரைமைக்கப்படாமல் உள்ளது என்பது தெரியவில்லை.
இந்த சாலையை போடக்கோரி இன்று கடையம் சின்னத்தேர் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி மாரிகுமார், காந்தியவாதி மோகன், கஜேந்திரன், கரும்புள்ளி கண்ணன், ராஜரத்தினம், அன்பழகன், சுப்பிரமணியன், முருகன், செந்தி்ல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.