சர்வதேச யோகா போட்டியில் தேர்வான மாணவனுக்கு திமுக பொறுப்பாளர் ரூ.15 ஆயிரம் உதவித்தொகை
1 min readDMK in-charge Rs.15 thousand stipend for international yoga competition exam student
3.9.2023
சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வான மாணவனுக்கு மேலும் ரூ.15 ஆயிரம் உதவித்தொகையை மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்.
தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை அருகேயுள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரசேகர் மகன் மகேந்திரசுமித். அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இம்மாணவன் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வாகி உள்ளான். ஏழ்மை நிலையில் உள்ள இம்மாணவனை ஊக்குவிக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
இந்நிலையில், சாம்பவர்வடகரை வருகை தந்த அந்த மாணவனை அழைத்து மேலும் ரூ.10 ஆயிரத்தை ஊக்கத் தொகையாக ஜெயபாலன் வழங்கினார். அப்போது சாம்பவர்வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து, சாம்பவர் வடகரை பேரூர் திமுக செயலாளர் முத்து, ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே. ரமேஷ், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்துப்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி சுடலைமுத்து, சாம்பவர்வடகரை கோ.மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.