அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவு முறிந்தது-கே.பி.முனுசாமி அறிவிப்பு
1 min read
A.D.M.K. – BJP Relationship broken-KP Munusamy announcement
25.9.2023
அ.தி.மு.க. – பா.ஜ.க. உறவு முறிந்தது என்று கே.பி.முனுசாமி அறிவித்தார்.
கூட்டணி
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் அ.தி.மு.க.வும் அங்கம் வகித்தது. கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உரசல் நிலவி வந்தது. பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்த சில கருத்துக்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது.
அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைமை பொறுப்பில் இருந்து நீக்க அ.தி.மு.க.வினர் கோரி வந்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே நிலவி வந்த உறவு முறிந்தது என அக்கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி முறிந்ததாக இக்கட்சியின் முக்கிய தலைவரான கே.பி. முனுசாமி நிருபர்களிடம் இன்று மாலை தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
முன்னதாக இன்று மாலை 3.45 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்நடந்த இந்தக் கூட்டத்தில் கூட்டணி முறிவு குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய அறிவிப்பு வெளியானதும் அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.