அரசு பஸ்சில் கஞ்சா கடத்தியவர் கைது
1 min readGanja smuggler arrested in government bus
27.9.2023
தமிழக- கேரள எல்லை பகுதியான புளியரையை அடுத்து கேரள மாநிலம் ஆரியங்காவு சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது தென்காசியில் இருந்து கொட்டாரகரைக்கு கேரளா நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சை போலீசார் நிறுத்தி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் பயணம் செய்த ஒரு வாலிபர் கைப்பையில் சோதனை செய்தபோது அதில் 4 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பத்தினம்திட்டா அருகே உள்ள சோழஞ்சேரி வள்ளிகோடு ஊரைச் சேர்ந்த சேர்ந்த அணில் குமார் (வயது 28) என்பதும், சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர்.