தென்காசியில் மாதர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம்
1 min readIn Tenkasi, Mathar Sangam petitioned the district collector
27.9.2023
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கடையம் சிவகிரி மக்கள் கோரிக்கைக்காக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
சிவகிரி தாலுகா சிவகிரி கிராமம் குமாரபுரம் வடக்கு தெரு, கோயில் ரோட்டில் சுமார் 1000-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள சுமார் 25 வீடுகளில் சட்டவிரோதமாக போதைப் பொருட்களான மது, கஞ்சா விற்பனை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட காவல்துறையிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை இது தொடர்ந்து நடைபெற்று வருவதால் அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்களுக்கு கடும் தொந்தரவாகவும், மன உளைச்சலாகவும் உள்ளது.
ஏனென்றால் இரவு நேரங்களில் போதை பொருள் வாங்க வரும் வெளியூர் நபர்கள் போதை பொருள் விற்கும் வீடு தெரியாமல் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களின் வீடுகளை இரவு நேரங்களில் கதவைதட்டி எழுப்பும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் பேசி சிறப்பு குழு அமைத்து தடுக்கலாம், சம்பந்தப்பட்ட போதை பொருள் விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதேபோல் தென்காசி தாலுகா கீழக்கடையம் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு 1997 ஆம் வருடம் சுமார் 40 வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தை பயனாளிகளுக்கு அளந்து பிரித்துக் கொடுக்கவில்லை, அந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவே இன்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனையை அளவீடு செய்து பயணாளிகளுக்கு வழங்க வேண்டும் என மனு கொடுக்கப்பட்டது.
ஆட்சித் தலைவர் தென்காசி தனித் தாசில்தார் (ஆதிதிராவிடர் நல துறை)டம் பேசி ஆய்வு செய்து பட்டா கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினார்.
இந்தப் போராட்டம் அனைத்திந்திய ஜனநாயக மாத சங்க மாவட்ட தலைவர் ஆயிஷா பேகம் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் கடையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், விவசாய சங்கம் மாவட்ட துணைத் தலைவர்கள் வேலுமயில், முத்துராஜன் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக சங்கம் கடையம் ஒன்றிய செயலாளர் பாரதி, துணை செயலாளர் சின்னத்தாய் மற்றும் வெண்ணிலா, சுந்தரி மற்றும் சிவகிரி தாலுகா செயலாளர் நாகஜோதி, தென்காசி சந்தனகுமாரி உட்பட 60க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.