June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

1 min read

Abdul Kalam birthday celebration in Tenkasi

15.10.2023

தென்காசியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இளைஞர்களின் எழுச்சி நாள் பேரணி நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளைஞர்களின் எழுச்சி நாள் பேரணியாக தென்காசி மாவட்ட நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக ஒரு மாபெரும் பேரணி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது.

இப்பேரணியை தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சிகளை தென்காசி மாவட்ட நாட்டு நலப்படுத்திட்ட தொடர்பு அலுவலர் வைகுண்டசாமி ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் சீனிவாசன் சுப்புலட்சுமி செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நல பணி திட்ட அலுவலர் முருகன், இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குத்தாலிங்கம் மற்றும் சாரணர் இயக்கம் மாவட்ட தலைவர் நேரு ராஜா, தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கார்த்தி , ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.