June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் 27 பேர் சிறைபிடிப்பு

1 min read

27 Tamil Nadu fishermen captured by Sri Lankan Navy

15.10.2023
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர் மீனவர் 27 பேரை,
5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று தொழிலுக்குச் சென்றனர். அன்று மதியம் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த
தங்கச்சிமடம் சர்புதீன், பாஸ்கர் பெர்னாண்டோ படகுகளில் இருந்த 12 மீனவர், அன்று மாலை கச்சத்தீவு – நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடம் லிடன், கென்னடி, மரியவாசிங்டன் படகுகளில் இருந்த 15 மீனவர் என 27 பேர் எல்லை தாண்டி
மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
சிறைபிடித்த மீனவர்களை துரிதமாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். அக்.18ல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *