கோவிந்தப்பேரியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடக்க விழா
1 min read
Inauguration ceremony of various development works in Govindapperi
15.10.2023
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரிஊராட்சியில் ஒரு லட்சம் பனை மரங்கள் வளர்ப்பு திட்டம் , ராஜாங்க புரத்தில் ரூ.42 லட்சத்தில் இரண்டு அடுக்குமாடி சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா,கோவிந்த பேரி மற்றும் ராஜாங்கபுரத்திற்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள இரண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் திறப்பு விழா, மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் முன்னிலை வகித்தார். இந்திய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினரும் சோகோ நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி கே பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கடையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் திருமலை முருகன் , வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழக்கடையம் பூமிநாத் ஏபி நாடானூர் அழகுதுரை, மந்தியூர் கல்யாண சுந்தரம், பொட்டல்புதூர் கணேசன், திருமலையப்பபுரம் மாரியப்பன், கீழ ஆம்பூர் மாரிசுப்பு, இரவணசமுத் திரம் முகமதுஉசேன், கோவிந்தபேரி பஞ்சாயத்து துணைத் தலைவர் இசேந்திரன், ஊராட்சி செயலர் மூக்காண்டி ,மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் வி பி ராமையா கடையம் தெற்கு வட்டாரத் தலைவர் முருகன்,ஊர் தலைவர்கள் சிங்கக்குட்டி ,தட்சிணாமூர்த்தி, சுப்பையா, கிருஷ்ணன், கணேசன் ,நாகராஜன் , மாணிக்கம், மாரியப்பன், பூலோக பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் ,மரங்கள் இல்லாததால் தான் பருவ கால மாற்றங்களினால் மழை பெய்வதில்லை. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அனைத்து பஞ்சாயத்து களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்க்க முன்வர வேண்டும். எனவும் மரங்கள் வளர்ப்பதினால் உண்டாகும் நன்மைகளையும் எடுத்து கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் பொன்னாடை போர்த்திகௌரவித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் ,மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஆகியோர் ராஜாங்கபுரம் மற்றும் கோவிந்த பேரியில் சாலை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்து கல்வெட்டினை திறந்து வைத்தனர். இன்று முதற்கட்டமாக ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.