தென்காசி நகர் மன்ற கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றம்
1 min read
Passing of 47 resolutions in Tenkasi Nagar council meeting
15.10.2023
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி கூட்ட அரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது இதில் 47 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டம் தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நடைபெற்றது.நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார் . இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட நகர் மன்ற கவுன்சிலர்கள்பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் அடிப்படை தேவைகள் குறித்து 47 மன்ற பொருள்கள் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதில் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புலியூர் 22வது வார்டுக்குட்பட்ட பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகில் வேகத்தடை இல்லாததால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும்,
அதே பகுதியில் கழிவு நீர் செல்வதற்கான வாறுகால் ஓடை இல்லாத காரணத்தால் அப்பகுதியை கடந்து செல்லும் மாணவ மாணவிகளும், பொது மக்களும் முகம் சுளிக்கும் அளவிற்கு கழிவுநீர் கரைபுரண்டு ஓடுகிறது அதனை சரி செய்துவாறுகால் ஓடை அமைத்து தருமாறும் அப்பகுதியின் அவல நிலையின் புகைப்படத்தை மன்றத்தில் காண்பித்து 22வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராமசுப்பிரமணியன் (எ) சந்துரு புகாரை முன்வைத்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி மகளிர் உரிமைத் தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு நகர் மன்றத்தின் சார்பாக 20வது வார்டு கவுன்சிலர் ரஃபிக் தலைமையில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
நகராட்சி நிர்வாகத்தில் இயங்கும் 20வது வார்டு நகராட்சி பள்ளிக்கு குடிநீர் வசதி இல்லாமல் மாணவர் படும் அவதி குறித்தும், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இருசக்கர வாகானங்களுக்கு பார்க்கிங் வசதி செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது குறித்தும், பல ஆண்டுகளாக கழிவு நீர் ஓடை சீர் அமைக்காமல் உள்ளது அதனை சீரமைக்க வேண்டும் என்றும் பேசினார்.