June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் உரிய அனுமதியின்றி இயங்கிய 2 ஆம்னிபஸ்கள் சிறைபிடிப்பு

1 min read

Seizure of 2 omnibuses operating without proper permit in Tenkasi

17.10.2023
தென்காசியில் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட இரண்டு ஆம்னி பஸ்களை தென்காசி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக சிறைபிடித்தனர்

தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் , மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி, சங்கரன்கோவில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் ஆகியோர் இணைந்து தென்காசி பகுதியில் நேற்று சிறப்பு கூட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற இரண்டு ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அந்த இரண்டு பஸ்களும் அனுமதிக்கு புறம்பாக இயக்கியதை கண்டு பிடித்தனர். உடனடியாக அந்த இரண்டு ஆம்னி பஸ்களையும் சிறைபிடித்து தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொண்டு போய் நிறுத்தி வைத்தனர்.

தென்காசி போக்குவரத்து துறை அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இது போன்று சிறப்பு கூட்டு வாகன தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் போக்குவரத்து விதிகளை மீறுவோர்,
உரிய அனுமதியின்றி இயக்கப்படும் வாகனங்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். என்று தென்காசி வட்டார போக்குவத்து அலுவலர் கண்ணன் கூறினார்.

-முத்துசாமி, நிருபர், தென்காசி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *