2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் – விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
1 min read
Send a man to the moon by 2040 – PM Modi advises scientists
17.10.2023
2040-க்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
மோடி ஆலோசனை
ககன்யான் திட்டத்தின் முன்னேற்றம், விண்வெளி ஆய்வு முயற்சிகளின் எதிர்காலம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விண்வெளித் துறை ககன்யான் திட்டம் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்கியது.
எச்எல்விஎம் 3ன் மூன்று குழுவில்லாத பயணிகள் உட்பட, தோராயமாக 20 முக்கிய சோதனைகளுக்கான திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில், 2040க்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் கூறியிருப்பதாவது:-
2035-க்குள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும். 2040-க்குள் நிலவுக்கு இந்தியாவின் சார்பில் மனிதனை அனுப்ப வேண்டும். வெள்ளி கிரகத்தின் ஆர்பிட்டர் மிஷன், செவ்வாய் லேண்டர் உள்ளிட்ட கோள்களுக்கு இடையேயான பயணங்களில் பணியாற்ற வேண்டும்.
இந்த சாதனையை அடைய, சந்திரயான் பணிகள், அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனத்தின் வளர்ச்சி, புதிய ஏவுதளம் கட்டுதல், மனிதனை மையமாகக் கொண்ட ஆய்வகங்கள், விண்வெளி தொடர்புடைய தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவைகளில் பணியை தீவிரப்படுத்த வேண்டும். விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய உயரங்களை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.