விருதுநகர்; பட்டாசு ஆலைகள் விபத்தில் 9 பேர் சாவு
1 min read
8 people died in firecracker factory accident near Virudhunagar
17.10.2023
விருதுநகர் மாவட்டத்தில் இரு பட்டாசு ஆலைகளில் நடந்த வெடி விபத்தில்9 பேர் பலியானார்கள்.
பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், விபத்து நடந்த அறைக்குள் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என சோதனை செய்து வருகி்ன்றனர்.
மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோரும் விரைந்துள்ளனர்.
இதேபோல், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையிலும் இன்று நன்பகல் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். வெடி தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்னொரு விபத்து‘
இதேபோல், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே போடு ரெட்டியபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையிலும் இன்று நண்பகல் விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு தயாரிக்கும்போது உராய்வு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.