July 22, 2026

Seithi Saral

Tamil News Channel

சோதனைக்கு சென்ற சுங்க அதிகாரிகளை நாய்களை ஏவியவர்கள்

1 min read

They set dogs on the customs officers who went to check

22.10.2023
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பேரூரை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவரது வீட்டில் சட்ட விரோதமாக அரக்கு காய்ச்சப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நள்ளிரவு 1.30 மணிக்கு அந்த வீட்டை அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்த முயன்றனர்.

அப்போது வீட்டில் இருந்தவர்கள், அதிகாரிகளை தாக்கினர். மேலும் வளர்ப்பு நாய்களை அவிழ்த்து விட்டு மிரட்டலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இந்த சூழலை பயன்படுத்தி வீட்டின் உரிமையாளர் ஹரிபிரசாத் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து அங்கிருந்த வினீத் பிஜூ, அமல், கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 3 லிட்டர் அரக்கு, 75 லிட்டர் சோடா மற்றும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *