நாகையில் ரூ.15 கோடி கோவில் நிலம் மீட்பு
1 min readRecovery of Rs 15 crore temple land in Nagai
28.10.2023
நாகையில் ரூ.15 கோடி மதிப்புள்ள நீலாயதாட்சி அம்மன் கோவில் நிலம் மீட்கப்பட்டது.
நாகை காயாரோகண சாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நாகை ஒன்றியம் பாலையூர் கிராமத்திற்கு உட்பட்ட சாலமன் தோட்டத்தில் உள்ள புன்செய் 4.79 ஏக்கர், நன்செய் 15.38 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையடுத்து நாகை மண்டல இணை ஆணையர் குமரேசன் உத்தரவின்பேரில், உதவி ஆணையர் ராணி தலைமையில், நாகை தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) அமுதா, நீலாயதாட்சி அம்மன் கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு நிரந்தர அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும்