June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பாஸ்போர்ட்டுடன் வெளிநாடு செல்லும் வாரணாசி தெரு நாய்

1 min read

Varanasi street dog traveling abroad with passport

28.10.2023
நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த மெரல் பொன்டென்பெல் என்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாவுக்காக இந்தியா வந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் சென்று வந்த அவர், வாரணாசியிலும் சில இடங்களில் சுற்றி பார்த்தார். அப்போது அங்குள்ள ஒரு தெருவில் சென்று கொண்டிருந்த போது திடீரென தெரு நாய் ஒன்று அவரது கண்ணில் பட்டது.
செல்லப்பிராணிகள் மீது மிகுந்த அன்பு கொண்ட மெரல் பொன்டென்பெல் அந்த நாய் மீது மிகுந்த அன்பு செலுத்தினார்.

ஜெயா என்ற பெயர் கொண்ட அந்த நாயை விட்டு செல்வதற்கு மெரல் பொன்டென்பெல்லுக்கு மனம் இல்லை. இதைத்தொடர்ந்து அந்த நாயை தன்னுடன் அழைத்து செல்ல முடிவு செய்த அவர் முறைப்படி நாய்க்கு தேவையான பாஸ்போர்ட் மற்றும் விசா ஏற்பாடு செய்ய மேலும் 6 மாத காலம் இந்தியாவில் தங்க வேண்டியதாயிற்று.

பாஸ்போர்ட்டு

இருப்பினும் நாய் மீது கொண்ட அன்பு காரணமாக இந்தியாவில் மேலும் 6 மாதம் தங்கி ஜெயாவின் பெயரில் முறையான பாஸ்போர்ட் மற்றும் விசா பெற்று நெதர்லாந்துக்கு அழைத்து செல்கிறார். அவரது இந்த செயல் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *