மேலகரத்தில் 33 பவுன் நகை கொள்ளை-3 பேர் கைது
1 min read33 pound jewelery robbery near Courtalam- 3 people arrested
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள மேலகரத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 33 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்த சென்னை தஞ்சாவூர் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர்களை போலீசார் கைது செய்தனர்.
டிக்கெட் பரிசோதகர்
குற்றாலம் அருகே உள்ள மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் இவர் அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18 ம் தேதி இரவு 7 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தென்காசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இரண்டு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.பீரோவில் வைக்கப்பட்டிருந்த 33 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்தது.
இது பற்றி ராஜாராம் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வழியாக சென்ற சென்னை பதிவெண் கொண்ட காரை வைத்து விசாரணையை தொடங்கினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய குற்றாலம் போலீசார்
சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் சுரேஷ் (வயது 25) சென்னை திருநின்ற ஊரைச் சார்ந்த சம்பத் என்பவர் மகன் சதீஷ் (வயது30) தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரது மகன் முருகானந்தம் (வயது 42) ஆகிய மூவரையும் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மூவரும் சேர்ந்து ராஜாராம் வீட்டில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 33 பவுன் தங்க நகைகள் மற்றும் இந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.