தென்காசியில் தாட்கோ மூலம மானியத்துடன் கடன் வசதி
1 min readSubsidized credit facility by TADCO in Tenkasi
30.10.2023
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது என்று தென்காசி மாவட் ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் தொழில் முனைவோரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ரிமெண்ட கழகத்தின் விற்பனை வகையில் முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராகவும் அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர் களுக்கு திட்டத்தொகையில் 30% (விழுக்காடு) அல்லது அதிகப்பட்சம் ரூ.2.25 இலட்சம் மானியமும், பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50% (விழுக்காடு} அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியம் அளிக்கப்படும்.
50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதரா வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் (Freezer) குளிர்விப்பான் (Cooler) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30% (விழுக்காடு) அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 இலட்சம் மானியமும், பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50% (விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.
200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர் களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் வரை மானியமும் விடுவிக்கப்படும் இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளாதர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் www.tahdco.com என்ற
இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் வட்டாச்சியர் அலுவலகம், 2வது தளம், தென்காசி. என்ற முகவரியில் உள்ள தாட்கோ அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தொலைபேசி எண்:04633-214487 மற்றும் அலைபேசி எண்:7448828513 மூலமாகவோ விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.