தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min readVoter Awareness Program in Tenkasi District
31.10.2023
தென்காசி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி வாக்காளர்கள் மற்றும் மாணவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தென்காசி அருகே இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இதில் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ரவிச்சந்திரன் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா, உதவி வாக்காளர் பதிவு அலுவலரும், தென்காசி தாசில்தாருமான சுப்பையன், ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம். தென்காசி சட்டமன்றத் தொகுதி தேர்தல் தனித்துணை தாசில்தார் கருணாகரன், வருவாய்த்துறை அலுவலர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார்.